நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சுயேச்சை சின்னமான பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினரால் இராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சுயேச்சை சின்னமான பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இபிஎஸ் நம்பர் ஒன் தான்.. எதுல தெரியுமா? பிரதமர் மோடி இப்படி சிந்தித்துள்ளாரா? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!
இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றிரவு சூரங்கோட்டை காலனி பகுதிக்கு ஓபிஎஸ் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தொண்டர்களுடன் நீண்ட நேரம் காத்திருந்தத ஓபிஎஸ் அணியின் ஒன்றிய செயலாளர் முத்து முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓபிஎஸ் அணியினரால் தாக்கப்பட்ட இராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன்.
"அழுகிய பலாப்பழம்" என கோஷமிட்டு விரட்டி அடிக்கப்பட்ட பன்னீர் டீம். pic.twitter.com/PXVmLgrWpz
இதற்கு இராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பதிலளித்து கொண்டிருக்கும் போது அவரை முத்து முருகன் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் ஓபிஎஸ் தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது பாஜக தொண்டர்கள் அங்கு குவிந்து அழுகிய பலாப்பழம் என கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோவை அதிமுகவை சேர்ந்த நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? லிஸ்ட் போட்டு பட்டையை கிளப்பும் வானதி சீனிவாசன்.!