தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய திறமை வாய்ந்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம் - ஜே.பி.நட்டா பேச்சு

Published : Apr 16, 2024, 07:39 PM IST
தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய திறமை வாய்ந்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம் - ஜே.பி.நட்டா பேச்சு

சுருக்கம்

தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை ராமநாதபுரம் தொகுதி மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில்  சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வாகன பேரணியை நடத்தினார். கிருஷ்ணா திரையரங்கம் தொடங்கி சாலை மார்க்கமாக காந்தி சிலை வரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது  பலாப்பழத்தில்  வாக்களிக்குமாறு  பதாகையை தூக்கி காண்பித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் வழி நெடுகிலும் பாஜக கொடி மற்றும் பலாப்பழ சின்ன பதாகைகளை ஏந்தியவாறு மலர்களை தூவி வரவேற்று தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர். 

சமூக வலைதளங்களில் என்னைவிட என் மனைவி தான் டிரெண்டிங்கில் உள்ளார் - டிடிவி தினகரன் பேச்சு

அப்போது பேசிய பாஜக தலைவர் நட்டா, ஓ.பன்னீர் செல்வம் திறமை வாய்ந்த தலைவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர். அவர் எம்.பி.யாகி டெல்லிக்கு வர வேண்டும். அவருக்கு ராமநாதபுரம் தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். தேனி தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரனாத், மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
TASMAC Holiday: மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!