மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

By Narendran SFirst Published Nov 21, 2022, 6:40 PM IST
Highlights

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து ஆதாரை இணைக்கும் முறை குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சார மானியம் பெற மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் இணைக்காவிட்டால் மானியம் நிறுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், ஆதார் எண்ணை இணைக்க மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் சிறப்பு வசதியை செய்துள்ளது. 

இதையும் படிங்க: மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம்… குற்றவாளிக்கு ஐஎஸ்ஐஎஸ்-யுடன் தொடர்பா? புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!!

அதன் மூலம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை சுலபமாக இணைக்கலாம். மேலும் நேரில் செல்லும் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் அட்டை நகலை கொடுத்தும் இணைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, யார் யாருக்கு மானியம் சென்றடைகிறது என்பது குறித்த தரவுகளைப் பராமரிக்கவே ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

  • ஆதார் எண்ணை இணைக்கும் முன், உங்கள் ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை இரண்டும் உங்கள் கையில் இருக்க வேண்டும். 
  • ஆதார் அட்டையின் புகைப்படமும், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆதார் அட்டையின் புகைப்படம் சேவை வழங்கும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பின்னர் tanged.gov.in பக்கத்தில் சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கவும் அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
  • அதில், ப்ளீஸ் கிளிக் ஹியர் டு வியூ தீஷ் ஃபார்மட்ஸ் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் சர்வீஸ் எண், கன்ஸ்யூமர் அல்லது நுகர்வோர் எண் உள்ளிட்டவற்றை உங்கள் மின் கட்டண அட்டையில் எங்கிருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
  • பிறகு, உங்கள் மின் இணைப்பு அட்டையில் இருக்கும் விவரங்களைக் கொண்ட மண்டலத்தை தெரிந்து கொள்ளுங்கள். மீண்டும் முகப்புப் பக்கத்துக்கு வந்து, உங்கள் சர்வீஸ் கனெக்ஷன் எண்ணைப் பதிவிடுங்கள். பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணையும் பதிவிடுங்கள். அதற்கு ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளிடவும்.

இதையும் படிங்க: மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம்… குற்றவாளி தங்கியிருந்த கோவை விடுதிக்கு பூட்டு!!

  • அடுத்த பக்கத்தில், உரிமையாளரின் பெயர், உள்ளிட்ட விவரங்கள் வரும், இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரம் கேட்கும். அதற்கு சரியான தகவலை அளித்து, உங்கள் ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்யவும். பிறகு ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிடவும்.
  • பிறகு, உங்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை 300கே.பி. என்ற அளவுக்குள் இருக்குமாறு பதிவேற்றம் செய்யவும்.
  • பிறகு, இங்கே கொடுத்திருக்கும் தகவல்கள் உண்மையானவை என்று சான்றளித்து சப்மிட் செய்யவும். பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற தகவல் வரும். 
click me!