புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

Published : May 15, 2023, 11:36 PM IST
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

சுருக்கம்

புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரு ரேஷன் கார்டை வாங்கினால் அதன் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ரேஷன் வினியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால், ரேஷன் கார்டு தயாரிக்கும் பணியும் மாநில அரசின் கீழ் வரும்.

இதையும் படிங்க: வெயில் தொல்லை தாங்கலயா.. கவலைப்படாதீங்க.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்

ரேஷன் கார்டு தயாரிப்பதற்கான போர்டல் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் வேறுபட்டது. நீங்கள் தமிழ்நாட்டில் வசித்தால் தமிழக அரசின் இணையதளமான https://tnpds.gov.in/ சென்று விண்ணப்பிக்கலாம். இந்த போர்ட்டல்களில், பெயர், முகவரி மற்றும் வருமானத் தகவல்களைக் கொடுக்க வேண்டும். தகவல் சரியாக இருந்தால் உங்கள் ரேஷன் கார்டு செய்து தரப்படும். ஆன்லைன் ரேஷன் கார்டை பெற சில முக்கியமான ஆவணங்கள் தேவை.

இதையும் படிங்க: 16 மாவட்டங்களில் சதமடித்த வெயில்... அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி பதிவு!!

இதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டு முகவரிக்கான சான்றாக மின்சாரம் அல்லது தண்ணீர் ரசீது எடுத்துக் கொள்ளலாம். ரேஷன் கார்டு பெற, வருமானச் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக க்யூ-ஆர் கோடு மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுகொள்ளும் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 65 கடைகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!