விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயத்தை குடித்த எக்கியார் குப்பம் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். நேற்று வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்றும் 3 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மனின் அருளாள் புது எனர்ஜியுடன் மக்களுக்கு நல்லது செய்ய உள்ளேன் - அமைச்சர் ரோஜா
கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் குண்டு வெடித்த விவகாரம்; சக்தி வாய்ந்த பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பதற்றம்
இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரி அமரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் ஏற்கனவே பணியிடை மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.