
தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. வருகிற 05ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
இதையும் படிங்க..ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு