பிற மாவட்டங்களில் இருந்து பிடுங்கி சென்னைவாசிகளுக்கு ஆவின் பால் விநியோகம்- பால் முகவர்கள் குற்றச்சாட்டு

By Ajmal Khan  |  First Published Apr 2, 2023, 8:42 AM IST

சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு என்றால் ஊடகங்கள் மூலம் அதிலும் சமூக வலைதளங்களில் பிரச்சினை பெரிதாகி விடுவதால் அதனை சரி செய்ய வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக பால் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 


ஆவின் பால் - போராட்டம்

பால் உற்பத்தியாளர்களின் பால் நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 5லட்சம் லிட்டருக்கும் மேல் கொள்முதல் குறைந்து தற்போது நாளொன்றுக்கு சுமார் 24லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனை காரணமாக தமிழகத்தில் ஆவின் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தமிழக அரசோ சரியான முறையில் பால் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

Latest Videos

சுங்கச்சாவடியில் கட்டணம் குறைக்கப்படாமல் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தப்படுவது ஏன்.? இது என்ன நியாயம்- அன்புமணி

இந்தநிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் தான் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 6லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் வசதி படைத்தோர், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்போர் என மாதாந்திர அட்டைகள் மூலம் ஆவின் பாலினை வாங்கி வருகின்றனர், 

வட மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு

அதனால் சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு என்றால் ஊடகங்கள் மூலம் அதிலும் சமூக வலைதளங்களில் பிரச்சினை பெரிதாகி விடுவதால் அதனை சரி செய்ய வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் சென்னைக்கு கொண்டு வரப்படுவதால். தற்போது காலை 8.00மணி நிலவரப்படி வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகம் முடங்கிப் போயுள்ளது.  இதனால் சிறு, சிறு கடைகளில் ஆவின் பால் பாக்கெட்டுகள் வாங்கும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களும், அவர்களுக்கு குறித்த நேரத்தில் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்களும் அல்லல்பட்டு வருவதாக பொன்னுசாமி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தூய்மை பணியாளர் தற்கொலை..! குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது- கனிமொழி உறுதி
 

click me!