தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு ஆலோசனை நடத்த உள்ளார்.
தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார். இந்தியா கூட்டணி கூட்டத்துக்காகச் சென்றிருக்கும் அவர் நாளை இரவு ஆலோசனை பிரதமர் மோடியைச் சந்தித்து மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியைச் நேரில் சந்திக்க நேரம் கோரியுள்ளார். காலையில் இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
undefined
முதல்வரின் கோரிக்கையை ஏற்று நாளை பிற்பகல் 12 மணி அளவில் சந்திப்புக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர், இரவு 10.30 மணிக்கு சந்திப்பு நடைபெறும் என்று மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, தற்போது தென் மாவட்டங்களில் பெய்துவரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்க உள்ளதாகத் கூறப்படுகிறது.
மேலும் அண்மையில் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிவாரண நிதி ஒதுக்கவும் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தென் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஶ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவிக்கும் 500 ரயில் பயணிகள் நாளை மீட்கப்படுவர்: ரயில்வே நம்பிக்கை