Alert : மக்களே உஷார் ! அடுத்த 3 மணி நேரத்தில்.. 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

By Raghupati RFirst Published Jun 17, 2022, 11:42 AM IST
Highlights

Rain : தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. 

இந்த பருவ மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் கோடை காலம் என்றாலே வெப்பச்சலனம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு அசானி புயல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக, சமீபகாலமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. 

நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும்என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

click me!