சற்றுமுன் முக்கிய தகவல்.. 5,000 சிறப்பாசிரியர்கள் நியமிக்க முடிவு.. யாரெல்லாம் தகுதி..? வெளியான தகவல்..

By Thanalakshmi VFirst Published Jun 17, 2022, 11:13 AM IST
Highlights

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. 
 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன. இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் மழலையர் வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும் என்றும் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் கிடையாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

மேலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாமல், இடைநிலை ஆசிரியர்களால் மழலையர் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இனி அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி செயல்படும். அது போல் மழலையர் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையம் மூலமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் படிக்க: #BREAKING சென்னையில் ஷாக்கிங் நியூஸ்.. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை..!

இதனையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளப்பியதால் , மழலையர் வகுப்பு குறித்தான் அறிவிப்பினை அரசு திரும்ப பெற்றது. அதன்படி,  அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. 

இந்நிலையில்,தமிழகத்தில் எல்கேஜி,யூகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி,2,381 அங்கன்வாடி மையங்களில் முதற்கட்டமாக 2,500 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதனால் DEE - Teacher Training courses படித்த பெண்களுக்கு சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: தாறுமாறாக ஓடி தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... தூக்கி வீசப்பட்ட 25 பேர் நிலை என்ன?

click me!