#BREAKING சென்னையில் ஷாக்கிங் நியூஸ்.. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை..!

By vinoth kumar  |  First Published Jun 17, 2022, 9:15 AM IST

கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த பெருமாள் கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை  இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இந்த சூழலில் தான் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு அடுத்த சில வாரங்களில் தங்கள் பரிந்துரையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த மணலியை சேர்ந்த பெயிண்டர் பெருமாள் கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

undefined

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் பணத்தை இழந்த மணலியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

click me!