MGM குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.. 40 இடங்களில் அலசி ஆராயும் அதிகாரிகள்.!

Published : Jun 15, 2022, 10:39 AM IST
MGM குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.. 40 இடங்களில் அலசி ஆராயும் அதிகாரிகள்.!

சுருக்கம்

எம்.ஜி.எம். நிறுவனம் தீம்பார்க், மதுபான உற்பத்தி, ஹோட்டல் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. இந்நிலையில்  வரி ஏய்ப்பு புகாரில் தீம் பார்க் நடத்திவரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய சென்னை, நெல்லை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர்.

எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

எம்.ஜி.எம். நிறுவனம் தீம்பார்க், மதுபான உற்பத்தி, ஹோட்டல் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. இந்நிலையில்  வரி ஏய்ப்பு புகாரில் தீம் பார்க் நடத்திவரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய சென்னை, நெல்லை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.எம். தலைமை அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை 2 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் சோதனை விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் வரிஏய்ப்பு புகார் காரணமாக சமீபத்தில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!