சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு..!

By vinoth kumarFirst Published Jun 14, 2022, 7:33 AM IST
Highlights

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இவர் சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள், பிரபலம், பணம் படைத்தவர்கள் என பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் தாக்கல் செய்த மனு குறித்து சித்ராவின் தந்தை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இவர் சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள், பிரபலம், பணம் படைத்தவர்கள் என பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க;- காதல்லாம் இல்லையாம்... அந்த ‘மேட்டர்’ லீக் ஆகிடக்கூடாதுனு ஹேம்நாத்துக்கு கழுத்தை நீட்டிய சித்ரா? - பகீர் தகவல்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.  இதற்கிடையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் இடைக்கால மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க;- VJ Chitra :ஹேம்நாத்தை யூஸ் பண்ணிட்டு கழட்டிவிட்ருனு சொன்னேன், அவ கேட்கல- சித்ராவின் தோழி வெளியிட்ட பகீர் தகவல்

click me!