தாறுமாறாக ஓடி தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... தூக்கி வீசப்பட்ட 25 பேர் நிலை என்ன?

By Ajmal KhanFirst Published Jun 17, 2022, 10:44 AM IST
Highlights

தேனியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 25 பயணிகள் காயமடைந்தனர் ஒருவர் உயிரிழந்தார்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

தேனி மாவட்டம் கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே   கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில்   மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கூடலூர் அரசு மருத்துவமனை அருகே புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.இந்தப் பாலம் கட்டும் பணிகள் காரணமாக வாகனங்கள் ஒரு வழித்தடத்தில்  மட்டும்  செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.நேற்று இரவு கூடலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக சாலையோரத்தில்  மணல் சரிந்து உள்ளது.இந்நிலையில் இன்று அதிகாலை காலை 5 மணி அளவில் கோயம்புத்தூரில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. 

25 பேர் காயம்-ஒருவர் பலி

இந்த பேருந்தை ஜெய் மங்கலத்தைச் சேர்ந்த  ஓட்டுனரான பழனிச்சாமி (50) என்பவர் இயங்கி வந்துள்ளார். கூடலூர்  அரசு மருத்துவமனை அருகே  சாலையோரத்தில்  மண் சரிந்து இருப்பதை இரவு நேரத்தில் கவனிக்காமல் பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டதாக புகார் கூறப்படுகிறது. பேருந்து கவிழ்ந்த உடன் அருகில்  கூடலூர் காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல்  தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில்  படுகாயமடைந்தவர்களை கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பேருந்தில் 25க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் அனைவரும்  படுகாயம் அடைந்துள்ளனர்.மேலும் கூடலூர் பகுதியை சேர்ந்த 50  வயது மதிக்கத்தக்க மாயி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூடலூர்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!