ஐந்து மாவட்டங்களில் பின்னிஎடுக்கப்போகும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
Published : Jul 20, 2018, 04:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
ஐந்து மாவட்டங்களில் பின்னிஎடுக்கப்போகும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சுருக்கம்

heavy rain will be come in 5 district

தேனி, திண்டுக்கள், நெல்லை. கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.வெப்பசலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கிறது. தொடர் மழையால் நீலகிரி, வால்பாறை, திண்டுக்கல், தேனியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 
இதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தலைநகரான சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் பலத்த மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.  கடலில் அலைகள் 3.5 முதல் 4.5 மீட்டர் வரை அலைகள் எழும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, திண்டுக்கல், நெல்லை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்னி பேருந்தை அடிச்சு தூக்கிய அரசு பேருந்து.. இவ்வளவு வசதிகள் இருக்கா? வியப்பில் பொதுமக்கள்
பன்னாட்டு தமிழ் நடுவம் அமைத்த அருகோ காலமானார்..! தமிழ் தேசியவாதிகள் அஞ்சலி