வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

Published : Dec 13, 2022, 07:14 AM ISTUpdated : Dec 13, 2022, 07:16 AM IST
வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

சுருக்கம்

தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் கரையை கடந்த போதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. 

இதையும் படிங்க;- தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ள மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியார்கள் அறிவித்துள்ளனர். சென்னையில், பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என வதந்தி பரவி வரும் நிலையில், இதுவரை விடுமுறை ஏதும் அளிக்கவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க;-  அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் புதிய தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்