
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-5 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செப்.26 முதல் செப்.28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு டிச.18 ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்த தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை... எந்தெந்த மாவட்டங்களில்? விவரம் உள்ளே!!
டிசம்பர் 18 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுத் தமிழ் தேர்வும் அதே நாளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது ஆங்கிலம் தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப்-5 ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: டிச.14 அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆளுநர் மாளிகை!!
பதிவிறக்கம் செய்வது எப்படி?