கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை... எந்தெந்த மாவட்டங்களில்? விவரம் உள்ளே!!

By Narendran SFirst Published Dec 12, 2022, 9:57 PM IST
Highlights

கனமழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

கனமழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் கரையை கடந்த போதிலும் பல பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்தபாடில்லை. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் வடக்கு கேரளா அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்... மாற்று தேதிகளை அறிவித்தது அண்ணா பல்கலை.!!

சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்த காரணத்தால் இன்று பள்ளிகளுக்கு மதியமே விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க: டிச.14 அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆளுநர் மாளிகை!!

இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

click me!