மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்... மாற்று தேதிகளை அறிவித்தது அண்ணா பல்கலை.!!

Published : Dec 12, 2022, 08:44 PM IST
மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்... மாற்று தேதிகளை அறிவித்தது அண்ணா பல்கலை.!!

சுருக்கம்

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு பல்கழைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகமும் செம்ஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்ததோடு மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: 3 வருடங்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண்.. வேதனையில் கலெக்டருக்கு மனு !

இந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்டஸ் புயல் காரணமாக 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 2024 தேர்தலில் ரஜினிகாந்த்.. மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவு.. கொளுத்தி போட்ட அர்ஜுன் சம்பத் !

இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 ஆம் தேதி நடைபெற இருந்த 2022 நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு 24 ஆம் தேதியும், 10 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் 31 ஆம் தேதியும்/ நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Scheme: தனியார் துறை பணியாளர்களுக்கு அரசு தரும் ரூ.15000 உதவித்தொகை.! உடனே விண்ணப்பியுங்கள்.!
ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!