
திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டி வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
ஆனால் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டே காணப்படுகின்றன.
இந்நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புலிவனம், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.