
வடகிழக்கு பருவமழை கண்ணா இது வரை பார்த்தது சாம்பிள்தான் !!! இன்மேல்தான் வரப்போகுது கனமழை !! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை !!
வடகிழக்கு பருவமழையால் தமழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது வரை பெய்தது சாம்பிள்தான் என்றும் இனிமேல்தான் கனமழை கொட்டப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு நீங்கள் பார்த்தது வடகிழக்கு பருவமழையின் ஒரு முன்னோட்ட காட்சிதான் என்றும் சென்னையில் நாளை மழை கொட்டித் தீர்க்கப்போகிறது என்றும் எங்கு பார்த்தாலும் மழையின் சுவடுகளை பார்க்கலாம்
மழை தரும் மேகங்கள் தென் மேற்கு வங்கக்கடலுக்கு அருகிலும், மன்னார் வளைகுடாவுக்கு அருகேயும் வந்துவிட்டது. இதன் தாக்கம் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் வரை எதிரொலிக்கும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்..
உண்மையான மழையின் சுயரூபத்தை இன்று காலை பார்க்கலாம். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமேஸ்வரம், டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் முதல் சென்னை கடற்கரை ஆகிய இடங்களில் நல்ல மழை இருக்கும். சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதே போன்ற மழைதான் அடுத்த ஒரு வாரத்துக்கு நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதே போல் திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், நாகை மாவட்டம் வேதாரண்யம், தலை ஞாயிறு ஆகிய பகுதிகளிலும் இன்று காலை கன மழை பெய்தது.