
சென்னையில் கனமழை… தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி…
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த வாரம் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.
தமிழகத்தில் இது வரை பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் அடுத்த வாரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்துார், தாம்பரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், பள்ளிக்கரனை, நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்கிறது. கடும் வெயிலுக்கு பின் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோல் நாகை மாவட்டம் கொள்ளிடம், வைத்தீஸ்வரர்கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.