
தென்மேற்கு பருவ மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தென் மேற்கு பருவமழை தமிழகத்தின் பல இடங்களில் பெய்து வருகிறது. நிலப்பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உள்ளதால் இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பட்டினபாக்கம், சாந்தோம், மந்தைவெளி, மயிலாப்பூர், நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்கிறது.
மேலும் கோயம்பேடு, வடபழனி, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்கிறது.
சென்னை ஆழ்வார்பேட்டியில் பெய்த கனமழையால் டிடிகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒருமணி நேரமாக கனமழை பெய்துவருவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.