சென்னையில் பெய்யுது ஜோரான மழை...!!! 2 நாட்கள் பொறுக்கச் சொன்ன வானிலை மையத்திற்க்கு ‘பல்பு’

 
Published : Jun 06, 2017, 03:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
சென்னையில் பெய்யுது ஜோரான மழை...!!! 2 நாட்கள் பொறுக்கச் சொன்ன வானிலை மையத்திற்க்கு ‘பல்பு’

சுருக்கம்

heavy rain in chennai

2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்  சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவ மழை இந்த ஆண்டு கொஞ்சம் முன்னதாக கடந்த மே.30 லேயே கேரளாவில் தொடங்கியது.

இதையடுத்து தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 2 அல்லது 3 நாளில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும்  சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியிருந்தார்.  

இந்நிலையில் தற்போது சென்னையில் தியாகராயர் நகர், மேற்கு மாம்பழம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், பாரிமுனை, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம்,நந்தனம், அடையார், பெசன்ட்நகர், திருவான்மியூர், பெரம்பூர், மாதவரம், மணலி, மெரினா, அசோக்நகர் உள்ளிட்ட பல இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.     

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!