அலர்ட்!! இன்று 8 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்ற போகிறது..?

Published : May 14, 2022, 02:22 PM IST
அலர்ட்!! இன்று 8 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்ற போகிறது..?

சுருக்கம்

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழையும் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யவாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

14.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15.05.2022. 16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதுகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமாரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.05.2022. 18.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில் இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி
செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

14.05.2022, 15.05.2022: இலட்சதீவு, கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதி, குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

16.05.2022: இலட்சதீவு, கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் திருமண மண்டபத்தில் விபத்து.. பள்ளி மாணவர் பலி..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!