சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பேருந்தும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய கபிலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் திருக்கழுகுன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ பேரன் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாரல் மழை
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கபிலன் (வயது22). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கமாக தினமும் கல்லூரிக்கு பைக்கில் சென்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டாண்டில் நிறுத்தவிட்டு மின்சார ரயிலில் செல்வார். நேற்று முன்தினம் முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஆகையால், பைக்கில் செல்லாமல் காரில் கல்லூரிக்கு புறப்பட்டார்.
கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்
இந்நிலையில், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்றபோது, சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பேருந்தும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய கபிலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் திருக்கழுகுன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
திமுக மாஜி எம்.எல்.ஏ., பேரன் பலி
கபிலனின் உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான கபிலன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணியின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.