ஷாக்கிங் நியூஸ்.. பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துனர் உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published May 14, 2022, 11:20 AM IST

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுபோதையில் பயணி தாக்கியதில் படுகாயமடைந்த நடத்துநர் பெருமாள் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுபோதையில் பயணி தாக்கியதில் படுகாயமடைந்த நடத்துநர் பெருமாள் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

 அப்போது நடத்துனர் பெருமாள் டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். இதனால், போதை ஆசாமிக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் கைகலப்பில் முடிய போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். 

இதனையடுத்து, நடத்துனர் பெருமாளை (54) சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போதை ஆசாமியை  மதுராந்தகம் போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!