தமிழகத்தில் இன்று கனமழை.. 7 மாவட்டங்களில் அலர்ட்.. வானிலை அப்டேட்..

Published : Jun 29, 2022, 02:39 PM IST
தமிழகத்தில் இன்று கனமழை.. 7 மாவட்டங்களில் அலர்ட்.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

29.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌
ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌
கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:Tamilnadu rain: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு

01.07.2022 முதல்‌ 03.07.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:பைக் மீது மணல் லாரி பயங்கர மோதல்.. தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச
வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

29.06.2022: ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

29.06.2022 முதல்‌ 01.07.2022 வரை: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌, தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌
இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

29.06.2022 முதல்‌ 02.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப்‌ பகுதிகள்‌, மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌
இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!