தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி, பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 29 ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை பொருத்தவரை விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுத்துறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிர்கள் நீரில் முழ்கின.
சென்னையில் மழைக்காரணமாக ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், நேற்றிரவு செளகார்பேட்டையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
மேலும் படிக்க:பரபரப்பு !! சென்னையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி
இந்நிலையில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..