உஷார் மக்களே !! விடாமல் ஊற்றப் போகும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

Published : Aug 21, 2022, 01:23 PM ISTUpdated : Aug 21, 2022, 03:00 PM IST
உஷார் மக்களே !! விடாமல் ஊற்றப் போகும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.   

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

21.08.2022 மற்றும்‌ 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.

24.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.

25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி
மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.. டிஆர்பி நடத்தும் தேர்வில் புதிய மாற்றம்..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி
செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

21.08.2022: தமிழக கடலோரப்பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

22.08.2022: தமிழக கடலோரப்பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

23.08.2022: தமிழக கடலோரப்பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

24.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ மத்துய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50
கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

25.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌
வீசக்கூடும்‌.

 மேலும் படிக்க: மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay : குதிரை பேர அரசு இல்லை... இது குதிரை வேக அரசு - சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொடுத்த மாஸ் பதிலடி
CM Vijay Wins Floor Test: 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் ஜோசப் விஜய்