1640-ல் புனித செயிண்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23 அன்று, இந்த கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
சென்னை! அதிக மக்கள் தொகை நிறைந்த பிரமாண்ட மாநகரங்களில் ஒன்று. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் முக்கிய தலைநகரம். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு தலைநகரம் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஒருபுறம் அழுக்குகள் நிறைந்திருந்தாலும், இன்றும் சிங்காரச் சென்னை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. சிங்காரத்தை சென்னை இழந்தாலும், இன்றும் கம்பீரமாக வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே வைத்திருக்கும் இந்த நகருக்கு இன்றுடன் 383 வயது ஆகிறது. தான் தோன்றிய நாள் முதல் இன்று வரை, தன்னைத் தேடி பிழைக்க வந்தாரை வாழவைக்கும் நிலப்பகுதியாகவே சென்னை இருந்துவருகிறது.
இன்று மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் பாதைகள், வானாளாவிய கட்டிடங்கள் என நவீன நகரமாகக் காட்சியளிக்கும் சென்னை மாநகரத்தின் துவக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் 'பிரான்ஸிஸ் டே' என்ற கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட். 1639 ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று, இவர் சோழமண்டல கடற்கரையில் கொஞ்சம் நிலத்தை வாங்கினார். அந்த மனிதர் வாங்கிய நிலத்தில் பிரிட்டீஷர்கள் 'செயின்ட்.ஜார்ஜ் கோட்டை'யை கட்டினர். அதைத்தொடர்ந்து, அந்த இடத்தைச் சுற்றி மெல்ல குடியிருப்புகள் உருவாகவே சென்னைப் பட்டணம் உருவாகத் தொடங்கியது.
1640-ல் புனித செயிண்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23 அன்று, இந்த கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
1678-ல் இக்கோட்டை வளாகத்தில் மிகத்தொன்மையான “புனித மேரி ஆலயம்” கட்டப்பட்டது. அந்தப் பேராலயத்தில்தான் 1753-ல் இராபர்ட் கிளைவ் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
1687 முதல் 1692 வரை ஆளுநராக இருந்த “யேல்” காலத்திலேதான், ஆசியாவிலேயே மிக உயரமான கோட்டை கொடிமரத்தில் கம்பெனி கொடிக்கு பதிலாக பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது.
மதராஸ் முதல் சென்னை வரை.. நாம் தொலைத்த முக்கிய மூன்று விடயங்கள்.. சற்று திரும்பி பார்ப்போம்..
1746-ல் பிரெஞ்சுக்காரர்களால் கோட்டையில் இருந்து வெளியே எடுத்துச்செல்லப்பட்டிருந்த கறுப்புப் படிகத்தாலான-கிரானைட் போன்ற படிகங்களால் ஆன 32 தூண்கள்; 1761-ல் மீண்டும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு; அவற்றுள் 20 தூண்கள் இந்தக் கட்டிடத்திலே நிறுவப்பட்டு, இப்போதும் அவை இந்த கட்டடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.