இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகிறது.. வானிலை அப்டேட்..

Published : Jul 04, 2022, 01:37 PM IST
இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகிறது.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

தமிழகத்தில் தொடந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் அகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

04.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு
இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.07.2022 முதல்‌ 07.07.2022 வரை : தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌
மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

08.07.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு
இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்.. மாநகராட்சி உத்தரவு..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌
குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

04.07.2022 முதல்‌ 06.07.2022 வரை: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தமிழக - ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌
வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

04.07.2022 முதல்‌ 08.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌
வீசக்கூடும்‌.

மேலும் படிக்க:பொதுக்குழு உறுப்பினர்கள் பணம் வாங்கினார்களா.? வைத்தியலிங்கம்,டிடிவிக்கு எச்சரிக்கை விடுத்த கே.பி.முனுசாமி

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Amma Unavagam: ஏழைகளின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்களுக்கு உயிர் கொடுத்த தளபதி! முதல்வர் விஜய் அதிரடி!
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்.! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்?