இந்த 3 மாவட்டங்களில் செமமழை பெய்யுமாம் !! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Aug 28, 2019, 8:35 AM IST
Highlights

தென் மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில்  அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
 

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ.,மழை உள்ளது. 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில், சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் தென்மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், தெற்கு தீபகற்ப பகுதிகளில், தென் மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாயப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலையில் தனுஷ்கோடி துறைமுக பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் அலை சுமார் 10 அடிக்கு மேல் எழும்பி வந்துள்ளது.


இதனால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி துறைமுக பகுதிக்கு செல்வதற்கும், செல்பி எடுத்துக்கொள்வதற்கும் கடலோர காவல் குழும போலீசார் தடைவிதித்துள்ளனர். மேலும் அரிச்சல்முனை போன்ற இராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடற்கரையில் குளிக்கும் செல்லும் சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரிக்கை விடுத்து வெளியேற்றி வருகின்றனர்.

click me!