தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
10.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.07.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.07.2022. 14.07.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர போறீங்களா..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விபரம்..
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும் படிக்க:நடிகையை ஏமாற்றிய புகார்.. எஸ்கேப் ஆன முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்.!
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
10.07.2022 முதல் 12.07.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துலும்
இடையிடையே 65 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.07.2022 முதல் 13.07.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துலவும் இடையிடையே 65 கிலோ மீட்டர்
வேகத்திலும் வீசக்கூடும்.
10.07.2022 முதல் 14.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர்
வேகத்திலும் இடையிடையே 66 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் படிக்க:ஆதிபராசக்தி முதல் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி வரை -துர்கா ஸ்டாலின் கோவில் விசிட்.!
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுஇகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.