கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நாசமாகின.இதனால், விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, டெல்டா மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.