சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்... மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Feb 4, 2023, 12:31 AM IST
Highlights

சென்னையில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்  மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்  மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்த தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அனைத்து துறை ஒப்புதலுக்கு பின்னரே பேனா சின்னம் அமைக்கப்படும்... தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்!!

மழைக் காராணமாக அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், பாடத்திட்டங்களை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில், சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (04-02-2023) சென்னையில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்கிறது... அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து!!

புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்படும் என தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் மேலும் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!