
சென்னையில் மீண்டும் கன மழை கொட்டத் துவங்கியது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், மெரினா, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது.
சென்னையின் மத்திய நகர்ப் பகுதியான கிண்டி, நந்தனம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், பெசண்ட் நகர், மந்தவெளி, போரூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை மாலை 6 மணிக்கு மேல் பெய்யத் துவங்கியது. இன்று காலை முதல் வெறிச்சிடிருந்தது வானம். மதியம் ஓரளவு வெய்யில் அடித்தது. இதனால் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை சரி செய்யும் பணி துரித கதியில் நடைபெற்றது. பல இடங்களில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யத் துவங்கியது.
சென்னையில் மழை இருப்பதைப் பொறுத்து நாளை விடுமுறை குறித்து முடிவு எடுக்கப்படும். மழை நிலவரத்தைப் பொறுத்து பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் கூறியுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அந்த அந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.