
கார்ப்பரேஷன் ஊழியர்களே தயங்கும் நேரத்தில், தனது ஆய்வாளர் பதவியை கூட நினைக்காமல் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மழை நீர் தேங்குவதற்கு காரணமான கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் கையுறை கூட அணியாமல் கையை விட்டு அடைப்பை எடுத்த வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமார் உள்ளிட்டோரை பொதுமக்கள் பாராட்டினர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டின் உள்ளே மழைநீர் புகுந்தது. இதேபோல், ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் உள்ளே மழைநீர் புகுந்தது.
சென்னை சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ராயப்பேட்டை, அவ்வை சண்முகம்
சாலையில் மழைநீர் வெள்ளம்போல் காட்சி அளித்து வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர்கள் அவ்வை சண்முகம் சாலையில் இறங்கி மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்டனர்.
சென்னை, வேப்பேரி, ஈ.வே.ரா. சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமார் மற்றும் காவலர்கள்
ஈடபட்டனர்.
கார்ப்பரேஷன் ஊழியர்களே தயங்கும் நேரத்தில், தனது ஆய்வாளர் பதவியைக் கூட நினைக்காமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மழைநீர் தேங்குவதற்கு காரணமான கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடத்தில், கையுறை கூட அணியாமல் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.