இது வெறும் ட்ரெய்லர் தான்! இனிமே தான் வெயின் ஆட்டமே இருக்காம்! ஆனாலும் ட்விஸ்ட் வைத்த வானிலை!

Published : Mar 06, 2025, 05:11 PM ISTUpdated : Mar 06, 2025, 05:12 PM IST
இது வெறும் ட்ரெய்லர் தான்! இனிமே தான் வெயின் ஆட்டமே இருக்காம்! ஆனாலும் ட்விஸ்ட் வைத்த வானிலை!

சுருக்கம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருப்பத்தூரில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் மழை பெய்யுமா என்பது குறித்து வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முடிவடைந்ததை அடுத்து மெல்ல மெல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இருப்பினும் வட மாநிலங்களில் இருந்து வீசிய குளிர் அலை காரணமாக தமிழகத்தில் இரவில் குளிரும், அதிகாலையில் பனி பொழிவும் நிலவியது. ஆனால் பிப்வரி மாதம் தொடங்கியதில் இருந்தே வெயில் படிப்படியாக உயர தொடங்கியது.

பசிபிக் கடல் மட்டத்தின் வெப்பம் காரணமாக இந்த ஆண்டில் கோடையில் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்றும், அதேநேரத்தில் வெப்ப சலனமும் அதிகரித்து கோடை மழையும் கொட்டித் தீர்க்கும் என்றும்  வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கரூர், வேலூர் மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நேற்று சுட்டெரித்தது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை இருக்கா? இல்லையா?  என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வெயில் எப்படி இருக்கும்? வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

மார்ச் 08 மற்றும் 09ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 10ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 11 மற்றும் 12ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் மார்ச் 10ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதையும் படிங்க: இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் சூப்பர் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!