
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் அதிகாரிகளுடன் காவிரி நீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியதாக சுகாதாரத்துறை செயாலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் முற்றிலும் பொய் சொல்கிறார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் ஜெயலலிதா சிகிச்சை குறித்து எதிர்கட்சிகள் சுமத்திய குற்றசாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் எய்ம்ஸ் அறிக்கையில் குறிபிடப்படவில்லை எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது ஜெயலலிதா மயக்கநிலையில் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வலியுறுத்தி ஓ.பி.எஸ் தலைமையில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் அதிகாரிகளுடன் காவிரி நீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியதாக சுகாதாரத்துறை செயாலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா யாரையும் பார்க்கவிடவில்லை.
ஒருதடவை கூட பார்க்க விடவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் போவோம், மருத்துவமனையில் இருப்போம், மீண்டும் ஜெயலலிதாவை பார்க்காமலேயே வந்து விடுவோம்.
ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே கருப்பு பூனை படையை திரும்ப பெற்றது ஏன்?
ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்பதற்கு முன்பு போயஸ் கார்டனில் இருந்து கருப்பு பூனை படை அகற்றப்பட்டது. அப்போது போயஸ் கார்டனில் என்ன நடந்தது?
ஜெயலலிதா மரணத்தில் தொடர்பு உடையவர்களுக்கும் அப்போலோ மருத்துவர்களுக்கும் சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு பொன்னையன் பேசினார்.