திருமண நிச்சயம் முடிந்து திரும்பிய போது கோர விபத்து - 4 பெண்கள் உள்பட 6 பேர் பலி

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
திருமண நிச்சயம் முடிந்து திரும்பிய போது கோர விபத்து - 4 பெண்கள் உள்பட 6 பேர் பலி

சுருக்கம்

He informed the police who seized the dead bodies were sent to the hospital for post-mortem

போளூர் அருகே வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்யாறு பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், திருமண நிச்சயதார்த்தம்  செய்ய போளூர் அருகே உள்ள கோவிலுக்கு வேனில் சென்றனர். பின்னர், நிச்சையத்தை முடித்து விட்டு மீண்டும் செய்யாறு திரும்பி கொண்டிருந்தனர்.

போளூர் அடுத்த எட்டுவாடி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, வேலூரில் இருந்து வந்த தனியார் பேருந்து வேனின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி