
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, அடிக்கடி தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், தமிழர்களை பொறுக்கிகள் என கூறி பதிவு செய்ததால், கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏராளமானோர், பதிலுக்கு அவரவருக்கு தோன்றிய எண்ணத்தில், சுப்பிரமணி சாமியை வசை பாடி கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் சுப்பிரமணிய சாமி, இன்று மீண்டும் ஒரு பதிவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழர்களுக்கு காண்டா மிருகத்தின் தோளும், கழுதையின் மூளையும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தமிழ் அமைப்பினர்களும், தமிழ் ஆர்வலர்களும் கொதித்து எழுந்துள்ளனர். பதிலுக்கு பல்வேறு வசனங்களை, சுப்பிரமணிய சாமிக்கு பதிவு செய்து அனுப்பி வருகின்றனர்.
ஒவ்வொரு முறை டுவிட்டரில் பதிவு செய்யும்போது, தமிழர்களை கொச்சை படுத்தி பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் சுப்பிரமணிய சாமி, அவரை கேட்கவோ, கண்டிக்கவோ யாரும் இல்லையா என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.