டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.. இந்தாண்டு 2 லட்சம் பரிசோதனை.. அமைச்சர் மா.சுப்ரமணியன்

By Thanalakshmi VFirst Published May 16, 2022, 2:28 PM IST
Highlights

தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு தடுப்புப் பணியில் பணியாற்றிய முன் களப்பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , "டெங்குக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அதனை பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் வகையிலும், நாடு முழுவதும் இன்று "தேசிய டெங்கு தடுப்பு தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறினார்.தமிழகத்தை பொறுத்தவரை சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் தொற்று நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், ‘எலிசா’ முறையில் டெங்குக் காய்ச்சலை கண்டுபிடிக்க பரிசோதனை மையங்கள் 125 ஆக தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளது என்றார். 

மேலும் படிக்க: காங் தலையில்லா முண்டம்.. தமிழர்கள் செத்து மடிந்த பிறகு இந்து ஈழமா..?? அண்ணாமலையை புரட்டி எடுத்த சீமான்.

இதுவரை தமிழகத்தில் 2,485 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிக்கபப்ட்ட அனைவருக்கும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளித்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை. மேலும் இந்த ஆண்டும் 2 லட்சம் டெங்கு பரிசோதனைகள் இலக்கு நிர்ணயித்து 5 மாதங்களில் 66,747 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2020 ஆம் ஆண்டு டெங்குக் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் 42,311 என்கிற குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு 2,400 பேருக்கு டெங்குக் காய்ச்சல் மட்டுமே உறுதிசெய்யப்பட்டது. ஆனால் தற்போது 2021ல் 1,73,199 டெங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு 6,039 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நடமாடும் மருத்துவ குழு அனுப்பப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட அந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள் கூட்டத்தினையொட்டி ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்தும் விரிவாக விளக்கும் வகையில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக செயலாற்றிய வட்டார சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: காமராஜர், கலைஞர் போல் என் ஆட்சியில்... பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்..

click me!