
விழுப்புரம் காமராஜ் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர் பாலு +2 மாணவனிடம் ஒழுக்கமாக இருந்து படிக்குமாறு கேட்டுக்கொண்ட காட்சி அனைவரையும் மன வேதனை அடைய செய்துள்ளது.
காரணம் இன்றைய கால கட்டத்தில்,ஒழுக்கம் இல்லாமல் வளரும் ஒரு சில மாணவர்களும்,எது சரி எது தவறு என்பதை கூட தெரிந்துகொள்ள விரும்பாத மாணவர்களும் தான் காரணமாக அமைகின்றனர்.
மாதா பிதா குரு என்பார்கள்...ஆனால் இன்றைய இளசுகள் மாதாவையும் மதிப்பதில்லை ..பிதா சொல்லையும் கேட்பதில்லை.... குருவிற்கு மரியாதையும் கொடுப்பதில்லை.. ஆக மொத்தத்தில் ஒழுக்கம் கெட்ட மனிதர்களாய் இந்த சமூதாயத்தில் வாழும் நிலை தற்போது உள்ளது.
பெற்றோர்கள் சப்போர்ட்
மாணவர்களை எது செய்தாலும் ஆசிரியர்கள் கண்டிக்கக்கூடாது என்ற நிலை உருவாகி உள்ளதால்,தான்தோன்றி தனமாக வளர்கின்றனர்.அதன் எதிரொலியாகத்தான் பல ஆசிரியர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத மாணவர்களை திட்டும் போதும்,அடிக்கும் போதும் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது நம்மை நாமே முட்டாளாக்கி கொள்ளும் நிலையை தான் குறிக்கிறது.
இந்நிலையில்,விழுப்புரம் நகராட்சி காமராஜர் மேல்நிலை பள்ளியில்,மாணவர்கள் ஒழுக்கமாக இருக்கவும்,நன்றாக படிக்கவும்,மாணவனிடம் மண்டியிட்டு கேட்டுக் கொண்டார் விழுப்புரம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு. இந்த புகைபடம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
ஆசிரியர்களை எப்போதும் தாக்கி பேசி வந்தவர்கள், இந்த புகைப்படத்தை பார்த்த பின் என்ன சொல்வார்கள்....
ஆனாலும் குருவையே மண்டியிட்டு மாணவர்களிடம் கைக்கூப்பி கெஞ்ச வைத்த செயல்,நேர்மையான சிந்தனை உடைய மக்களை புண்பட வைத்துள்ளது. மனம் வருந்த வைத்துள்ளது என்பது உண்மை...