500களில் பணம் இருந்தும் 100-க்கா ஏ.டி.எம் விரைந்த சாமானியன்…

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 01:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
500களில் பணம் இருந்தும் 100-க்கா ஏ.டி.எம் விரைந்த சாமானியன்…

சுருக்கம்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 500 ரூபாய் கையில் இருந்தும், 100 ரூபாய்க்கா ஏ.டி.எம் மையத்தை சாமானிய மனிதர்கள் படையெடுத்துச் சென்றனர் மேலும் வணிக நிறுவனங்களுக்கும் படைபெயடுத்தனர்.

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமம் மோடி எந்தவித முன்னறிவிப்பையும் மக்களுக்கு தெரிவிக்காமல் திடீரென அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ள 50 நாள்கள் கெடு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதனை வங்கிக் கணக்கில் போட எந்தவித அடையாள அட்டையும் தேவையில்லை. ஆனால், புது நோட்டுகளாக மாற்ற அடையாள அட்டை வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பால் புதுக்கோட்டையில் உள்ள கீழராஜ வீதி, பிரிந்தாவன் கார்னர், பெரியார்நகர், ராஜகோபுரம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பகுதிகளிலுள்ள ஏ.டி.எம். மையங்களில் ரூ.100 நோட்டுகளை எடுக்க பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

கையில் காசு இருந்தும் உணவு சாப்பிட முடியாத நிலை, அழும் குழந்தைக்கு சாப்பிட ஏதும் வாங்க வழி சொல்லுங்கள், என்று மக்கள் பதறிய அவலம் நேற்று நடந்தது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அங்கு ரூ.500, ரூ.1000 தாள்களை கொடுத்து பெட்ரோல் போட்டு விட்டு மாற்றினர்.

இதேபோல அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, திருமயம், நார்த்தாமலை, இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம், கோட்டைப்பட்டினம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ரூ.100 நோட்டுகளை எடுக்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

இதனால் புதுக்கோட்டை மாவட்டமே பரபரப்பாக மாறியது.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் நாளிலும் இப்படியா? திமுகவின் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது! கொதிக்கும் அன்புமணி
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை.. பனிபொழிவு எப்படி இருக்கும்?