Has the situation giving Royalty Error? Amaran question FIAT Ganga
இளையராஜாவின் இசை என்பது பெய்யும் மழை போன்றது எனவும் காப்புரிமை கேட்பது முறையல்ல எனவும் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் தனது 50 கால நிறைவையொட்டி கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் பல்வேறு இசையமைப்பாளர்கள் பாடிய பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்நிலையில், முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் தான் கம்போஸ் செய்த பாடல்களை என் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த இளையராஜா சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ராயல்டி வாங்கித்தான் பிழைக்கும் நிலைமை வந்துவிட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இளையராஜாவின் இசை என்பது பெய்யும் மழை போன்றது எனவும் இளையராஜாவின் இசையை மக்கள் அனைவரும் ரசிக்கின்றனர். காப்புரிமை கேட்பது முறையல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது எனக்கு புரியவில்லை எனவும், இவ்வாறு அவர் நடந்து கொண்டது சரியானது அல்ல என தெரிவித்துள்ளார்.