பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை... தங்க கவசத்தை அதிமுக பொருளாளரிடம் ஒப்படைத்த வங்கி அதிகாரிகள்

Published : Oct 25, 2023, 02:00 PM IST
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை... தங்க கவசத்தை  அதிமுக பொருளாளரிடம் ஒப்படைத்த வங்கி அதிகாரிகள்

சுருக்கம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அனுவிக்கப்படக்கூடிய தங்க கவசம் போலீஸ் பாதுகாப்போடு மதுரையில் இருந்து பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது.  

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் நடைபெறும். இதனையொட்டி  கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் வழங்கினார். குரு பூஜை முடிவடைந்ததும் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வகையில்,  மதுரை அண்ணாநகர் பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியாவில் வைக்கப்படும். ஒல்வொரு ஆண்டும் அதிமுக சார்பாக அந்த கட்சியின் பொருளாளராக இருக்கக்கூடியவர்கள் தங்க கவசத்தை எடுத்து பசும்பொன் தேவர் நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நீதிமன்ற உத்தரவின் படி தங்க கவசம் வங்கி நிர்வாகம் சார்பாக நேரிடையாக பசும்பொன் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்ததையடுத்து  அதிமுக பொருளாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தங்க கவசத்தை பெறுவதற்காக மதுரையில் உள்ள வங்கிக்கு வந்தார். அப்போது பாதுகாப்பு கருதி வங்கிக்குள் அதிமுகவை சேர்ந்த 10 முக்கியஸ்தர்கள் மற்றும் அனுப்பப்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே   வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தங்க கவசம் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதனை பெற்றுக்கொண்ட அவர் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் தங்க கவசத்தை வழங்கினார்.  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு தங்க கவசம் உள்ள வாகனம் பசும்பொன் நோக்கி புறப்பட்டது.   

தங்க கவசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசன்  கூறுகையில், தங்க கவசம் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலைக்கு செலுத்தப்பட உள்ளது. அதிமுக தொடர்பான எல்லா வழக்கிலும் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்யும் நிலையில் தங்க கவச விவகாரத்தில் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து விட்டாரா என்கின்ற கேள்விக்கு?? எங்கே சென்று வந்தாலும் ஓபிஎஸ் தோல்வியைத்தான் சந்தித்திருப்பார் என கூறினார். 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!