
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணசாமியின் உடல், சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வரப்படுகிறது.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றார்.எர்ணாகுளத்தில் ஹோட்டல்கள் கிடைக்காத நிலையில், நீண்ட நேரம் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் விடுதி ஒன்றில் இடம் கிடைத்துள்ளது. அப்போது அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பின்பு சரியாகி விட்டது.
இந்த நிலையில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வுக்கு அனுப்பி வைத்து விட்டு, வெளியே வெளியே இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த அருகில் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக் கொண்டு சென்ற கிருஷ்ணசாமி அங்கு உயிரிழந்தார். இதை அடுத்து, கிருஷ்ணசாமியின் உடல், மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தந்தை இறந்தது தெரியாமல் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு எழுதினார்.
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த அவர் எனது அப்பா எங்கே என்று கேட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் மாணவனை அழைத்துக் கொண்டு எர்ணாகுளம் மருத்துவமனைக்கு சென்றனர்.
மருத்துவமனையில் தனது தந்தை உயிரற்ற உடலாக இருந்ததைப் பார்த்த கஸ்தூரி மகாலிங்கம், கதறி அழுதார். இதனால் அந்த பகுதி சோகமயமானது. கிருஷ்ணசாமியின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது உறவினர்கள் இருவர் எர்ணாகுளம் வந்தனர்.
பின்னர் அவர்களிடம் கிருஷ்ணசாமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து ஆம்புலன்ஸ் வண்டியில் கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. ஆம்புலன்ஸ் வண்டியில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், கண்களை மூடிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.
தற்போது எர்ணாகுளத்தி இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவின்போது கிருஷ்ணசாமியின் சொந்த ஊருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.