
நீட் தேர்வுக்காக கேரளாவுக்கு தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்து சென்ற தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு தமிழக அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றுள்ளார். எர்ணாகுளத்தில் ஹோட்டல்கள் கிடைக்காத நிலையில், நீண்ட நேரம் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். ஒரு வழியாக விடுதி ஒன்றில் இடம் கிடைத்தது. இந்த நிலையில், அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரததில் சரியாகி உள்ளது.
இந்த நிலையில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வுக்கு அனுப்பி வைத்து விட்டு, வெளியே வெளியே இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த அருகில் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக் கொண்டு சென்ற கிருஷ்ணசாமி அங்கு உயிரிழந்தார். இதை அடுத்து, கிருஷ்ணசாமியின் உடல், மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தந்தை இறந்தது தெரியாமல் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு எழுதினார்.
தேர்வு முடித்து வெளியே வந்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தனது தந்தை எங்கே என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து, மாணவனை, கேரள போலீசார், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் தனது தந்தை உயிரற்ற உடலாக இருந்ததைப் பார்த்த கஸ்தூரி மகாலிங்கம், கதறி அழுதார். இதனால் அந்த பகுதி சோகமயமானது. கிருஷ்ணசாமியின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது உறவினர்கள் இருவர் எர்ணாகுளம் வந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரணம் நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.