#Breaking : நாளை முதல் மூடப்படுகிறது கிண்டி சிறுவர் பூங்கா... காரணம் இதுதான்!!

By Narendran SFirst Published Jan 16, 2022, 6:34 PM IST
Highlights

கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். 

கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,53,046 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 23,459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது.  பாதிப்பு விகிதம் 15.3 சதவீதமாக உள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பானது 9000-ஐ  நெருங்கி உள்ளது. இன்று 8963 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 2504 பேருக்கும், கோவையில் 1564 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 802 பேருக்கும், கன்னியாகுமரியில் 572 பேருக்கும், திருவள்ளூரில் 1393 பேருக்கும், மதுரையில் 631 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 9,026 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 36 ஆயிரத்து 986 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,18,017 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் புதிதாக யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பில்லை. மொத்த எண்ணிக்கை 241 ஆகவே உள்ளது.

இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் நிலைமையை மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப முடிவு எடுத்து திறப்பு தேதி பின் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

click me!